தமிழ்நாடு

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: அண்ணாமலை கோரிக்கை!

Published

on

மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுவது போல் மாணவர்களுக்கும்m மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்விக்காக மாதம் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்

தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை நிறுத்தி விட்டு மாணவிகளுக்கு இந்த உதவியை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது போல் மாணவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தமிழக பட்ஜெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை கூறியுள்ளார். மேலும் பேருந்து கொள்முதல், பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்

 

Trending

Exit mobile version