தமிழ்நாடு

பிரதமரை கேலி செய்த தமிழ் சேனல் மீது நடவடிக்கை: அண்ணாமலை அறிவிப்பு

Published

on

பிரதமரை கேலி செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் சேனல் ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது, இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பிரதமரை கேலி செய்யும் வகையிலும் இந்தியாவை தரக்குறைவாகப் பேசும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பிரதமரின் கவனத்திற்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்திற்கும் மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கும், கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு சேனலில் பிரதமர் அவர்களின் மாண்பை குறைக்கும் வகையில் காட்சிகள் வைத்திருப்பதை கூறியுள்ளேன். அவரும் அது குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சேனல் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சேனல் ஒன்றில் இரண்டு குழந்தைகள் புலிகேசி மன்னர் மற்றும் மங்குனி அமைச்சர் வேடத்தில் நடித்திருந்த அந்த நிகழ்ச்சியில் பிரதமர் குறித்து தரக்குறைவான வசனங்கள் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் விதிகளின்படி குழந்தைகள் தங்கள் அறிவுக்கு எட்டாத வசனங்களை பேச வைக்க கூடாது என்றிருக்கும் நிலையில் குழந்தைகளை இவ்வாறு வசனம் பேச வைத்தது தவறு என்றும் அதனால் சேனல் நிர்வாகம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version