தமிழ்நாடு

உண்மையை ஒப்புக்கொண்டார் சட்ட அமைச்சர்: ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து அண்ணாமலை!

Published

on

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் இன்று கவர்னரை நேரில் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வர அரசாணை பிறப்பிக்க வரும் சட்டமன்ற கூட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் கொண்டிருந்தார்.

ஏற்கனவே தமிழக பாஜக இந்த மசோதா குறித்து கூறிய போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை என்றும் அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பதில் சொல்லாத திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆன்லைன் மசோதா காலாவதியான ஆனதற்கு கவர்னர் மட்டுமே காரணம் என குற்றம் சாட்டியிருந்தன. இந்த நிலையில் சட்ட அமைச்சர் யார் ரகுபதி அவர்களின் பேச்சுக்கு பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கூறியிருப்பதாவது:

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் அறிவாலயம் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version