தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள்? ‘ஸ’ விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி!

Published

on

’ஸ’ என்ற எழுத்து இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைப்பீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில்தான் தமிழணங்கு என தனது டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அந்த பதிவில் ’ஸ’ என்ற வடமொழி எழுத்து இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தென்னரசு தமிழை போற்றுகிறோம் என்ற போர்வையில் உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வால் தெரிந்துவிட்டது என்று பதிவு செய்திருந்தார் .

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்டுள்ள தமிழன்னையின் படத்திலுள்ள ’ஸ’ என்ற எழுத்தை கண்டித்து விமர்சித்ததாக அறிகிறேன் .

தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .

மேலும் ’ஸ’ என்ற எழுத்தை நீக்கி அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டுமென்றும் அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version