தமிழ்நாடு

இந்த 4 புள்ளிகளை இணைத்து பாருங்கள்… விடை எளிதில் புரியும்: அண்ணாமலை டுவிட்

Published

on

கோபாலபுரம், பிஜிஆர் எனர்ஜி, மின்சார அமைச்சகம், செந்தில் பாலாஜி, இந்த 4 புள்ளிகளை இணைத்து பாருங்கள் விடை எளிதில் புரியும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களாக மின்சாரத் துறையில் ஊழல் ஏற்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய அளவில் கமிஷன் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

குறிப்பாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் நிலுவையில் இருந்தது என்றும், 4 சதவீத கமிஷனை எடுத்துக்கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென 29.64 கோடி பணம் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டது என கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பதில் கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைதளத்தில் கூறியிருந்ததாவது: மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.

2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அண்ணாமலை தனது தவறை உணர்ந்து கொண்டு 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அண்ணாமலை அவர்கள் மீண்டும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ‘கோபாலபுரம், பிஜிஆர் எனர்ஜி, மின்சார அமைச்சகம், செந்தில் பாலாஜி, இந்த 4 புள்ளிகளை இணைத்து பாருங்கள் விடை எளிதில் புரியும்’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version