தமிழ்நாடு

ஆமாம், நான் ஒரு பொறுக்கி தான்: திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுக்கி என அமைச்சர் அன்பரசன் விமர்சனம் செய்த நிலையில் ஆமாம் நான் பொறுக்கி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் அன்பரசன், ‘அண்ணாமலை ஒரு பொறுக்கி என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரவுடிகளை அவர் வேட்டையாடினார் என்றும் ஆனால் தற்போது ரெளடிகளை தனது கட்சியில் சேர்த்து வருகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் அன்பரசன் என்னை பொறுக்கி என்று கூறியுள்ளதாக அறிந்தேன். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் பொறுக்கி தான். ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்பதை அமைச்சர் அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

திமுகவின் ஊழலை பொறுக்கி. திமுகவின் அராஜகத்தை பொறுக்கி. திமுகவின் வன்முறைக் கலாச்சாரத்தை பொறுக்கி. மக்கள் மன்றத்தில் வைத்து வருகிறேன் என்றும் அதனால் அமைச்சர் கூறிய பொறுக்கி என்ற பட்டத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version