தமிழ்நாடு

கொலுசு, மல்லிகைப்பூ, டூப்ளிகேட் விண்ணப்பம்: திமுக தில்லுமுல்லுவை தோலுரித்த அண்ணாமலை!

Published

on

கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கோவையைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு திமுகவினர் கொலுசு இலவசமாக கொடுத்து வாக்கு கேட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த கொலுசு மதிப்பு 2000 ரூபாய் என திமுகவினர் பொதுமக்களிடம் கூறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை என்று தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது திமுகவினர் கொடுத்த கொலுசை வாங்கி நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் 16.1 சதவீதம் மட்டுமே வெள்ளி உள்ளது. இதன் மொத்த மதிப்பு 200 ரூபாய்க்குள் தான். ஆனால் அமெரிக்காவில் இருந்து கண்டுபிடித்தது போல் 2000 ரூபாய் என போலியாக ஏமாற்றுகின்றனர் என்று முதலில் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தினார்.

மேலும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று போலியான விண்ணப்பத்தை தந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் அரசாணை வெளியிடவில்லை, அறிவிப்பும் வெளியாகவில்லை ,ஆனால் அதற்குள் போலியாக விண்ணப்பத்தை தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் எனவே மக்கள் அதை அந்த விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்தள்ளார்.

மேலும் திமுகவினர் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் அவர் மல்லிகைப்பூவை காண்பித்து பேசினார். அண்ணாமலை பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Trending

Exit mobile version