தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு.. அண்ணாமலைக்கு விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?

Published

on

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபை தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு கிழக்கு உள்பட ஒரு சில தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது.

நாகலாந்து மேகாலயா ஆகிய சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தவரை ஜனவரி 3ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி தேதி என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் மனுக்களை திரும்ப பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த வாக்குகள் மார்ச் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு நகராட்சி ஆணையர் சிவகுமார் இந்த தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தான் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார் என்பதை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த தொகுதியில் அதிமுக தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது பாஜகவுக்கு விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அதிமுக இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளரை களம் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பை அவர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஓபிஎஸ் சார்பில் வரும் 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தனி வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் என்று சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் திருவிழா ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version