தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

Published

on

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சர் ஆனதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன் உள்பட 5 பேர் பரிசீலனை செய்யப் பட்டதாகவும் இவர்களில் ஒருவரும் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக எந்த அளவுக்கு பொது மக்களை கவர்ந்து வாக்குகளைச் சேகரிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவை பதவி கொடுக்கவில்லை என்றும் அவர் தமிழகத்தில் பாஜகவை என மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பார் என்றும் பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்கும் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது/ ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version