தமிழ்நாடு

ரூ.500 கோடி இழப்பீடு கேட்ட நிறுவனத்திற்கு அண்ணாமலை கொடுத்த பதில்!

Published

on

தன்னிடம் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட நிறுவனமொன்றுக்கு அண்ணாமலை அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிஜிஆர் நிறுவனம் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கோபாலபுரம், பிஜிஆர் மற்றும் மின்சாரத்துறை, செந்தில் பாலாஜி இந்த நான்கையும் இணைத்தால் உண்மை என்ன என்று புரியும் என்று பதிவு செய்திருந்தார்.

மின்சார துறையில் நடந்த ஊழலுக்கு பிஜிஆர் நிறுவனமும் உடந்தை என்பது போன்று அண்ணாமலை அவர்கள் பதிவு செய்த ட்வீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பிஜிஆர் நிறுவனம் அண்ணாமலை மீது ரூபாய் 500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை கூறியிருப்பதாவது:

சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என்று பதிவு செய்துள்ளார். அண்ணாமலையில் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version