தமிழ்நாடு

கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: பாஜக பிரமுகர்கள் திடீர் ஆலோசனை!

Published

on

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் என்பவரது சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அவர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார் என்று தெரிந்தது. மேலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கேடி ராகவன் இதுகுறித்து தான் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோவை வெளியிட்ட மதன் என்ற யூடியூபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேடி ராகவன் வீடியோ விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த ஆலோசனையில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ நாயகமும் கலந்துகொண்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் கேடி ராகவன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் யூடியூபர் மதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் பாஜக எம்எல்ஏ ஒருவரின் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனதை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சிக்கி வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version