சினிமா

அண்ணாத்த பட ஷூட்டிங் நிலவரம் என்ன? – இதோ புதிய அப்டேட்….

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி கலந்து கொண்டார். ஆனால், லக்னோ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவில்லை.

லக்னோவில் படப்பிடிப்பு வருகிறது 21ம் தேதி முடிவடைகிறது. அதன்பின் படக்குழுக்குழு கொல்கத்தா செல்கின்றனர். இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் எனத்தெரிகிறது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதோடு அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இதற்கிடையே, ஒருபக்கம் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினிகாந்த் தனது டப்பிங் பணியை செய்து வருகிறார். எனவே, திட்டமிட்டபடி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

Trending

Exit mobile version