சினிமா

அடிச்சி தூக்கிய அண்ணாத்த!… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் படத்தின் விமர்சனம் கலவையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை இயக்கியுள்ளார் சிவா. வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை அண்ணாத்த படம் ஞாபகப்படுத்துகிறது எனவும், செண்டிமெண்ட் காட்சிகள் சீரியல் போல் இருக்கிறது எனவும் பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும், பெரிதாக வேறு படம் இல்லை என்பதால் இப்படத்தை பலரும் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படம் நேற்று ஒரு நாளில் ரூ.11 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும், மற்ற மாநிலங்கள் மற்றும் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.34.92 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம், இப்படம் நேற்று இரவே தமிழ்ராக்கர்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version