சினிமா

2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்… மாஸ் காட்டும் அண்ணாத்த….

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் படத்தின் விமர்சனம் கலவையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை இயக்கியுள்ளார் சிவா. வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை அண்ணாத்த படம் ஞாபகப்படுத்துகிறது எனவும், செண்டிமெண்ட் காட்சிகள் சீரியல் போல் இருக்கிறது எனவும் பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும், பெரிதாக வேறு படம் இல்லை என்பதால் இப்படத்தை பலரும் பார்த்து வருகின்றனர்.

இப்படம் படம் வெளியான 4ம் தேதி இப்படம் ரூ.11 கோடியை வசூல் செய்துள்ளதாகவும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.34.92 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. அதேபோல், 2வது நாளான நேற்று இப்படம் ரூ.27.15 கோடி வசூல் செய்துள்ளது. மொத்த வசூல் ரூ.62.07 கோடி எனவும், உலகம் முழுவதும் 2 நாட்களில் அண்ணாத்த படம் ரூ.112.86 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சனி,ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், இப்படம் மேலும், சில கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version