தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published

on

அண்ணா பல்கலைகழகத்தின் செமஸ்டர் முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது என்பதும் அதேபோல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தேர்வுத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் பல மாணவர்களும் ஒரே நேரத்தில், ரிசல்ட் பார்க்க முற்பட்டதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுடைய தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version