தமிழ்நாடு

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு தேதி: புதிய தேதி என்ன?

Published

on

அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டது என்பதும் சமீபத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 5, 6, 9 , 11 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version