தமிழ்நாடு

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை!

Published

on

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி பிஇ, பிடெக், மற்றும் பி.ஆர்க், பொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை மாலை என இருவேளைகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த வகையில்தான் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரி பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் நடைபெறும் என தமிழக உள்ள உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில் பாடவாரியாக தேர்வு அட்டவணை இன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு அட்டவணையில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version