செய்திகள்

ரூ.200 கோடி லஞ்சம்.. அண்ணா பல்கலை.யை உலுக்கும் ஊழல்!

Published

on

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி ஊழல் நடந்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அதில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பேராசிரியர்கள் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். இதற்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 200 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவரிடம் 10 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் ஜி.வி உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version