சினிமா
அஞ்சலி, ராய்லஷ்மியின் இணைந்து கலக்கும் ஆனந்த பைரவி!
![anjali - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/anjali.jpg)
பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி தற்போது லீசா, நாடோடிகள் 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் டைட்டில் ரோலில் நடித்து நந்தி விருது பெற்றுள்ளார்.
இவர் தற்போது ”ஆனந்த பைரவி” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரி பாலாஜி இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகை ராய்லஷ்மியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
விருவிருப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ,இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.