தமிழ்நாடு

இத்தனை வருசம் அரசியல் செய்தும் 6 சீட் தானா? விசிகவை கிண்டல் செய்தாரா அனிதா சம்பத்?

Published

on

திமுக கூட்டணியில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்ததே. மிகவும் குறைவான தொகுதி ஒதுக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் அனிதா சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து வெறும் ஆறு சீட்டுகள் தானா’ என்று பதிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது.

இதுகுறித்து விசாரித்தபோது அனிதா சம்பத் பெயரில் உருவாக்கப்பட்ட போலி டுவிட்டர் பக்கம் இது என்றும் அனிதாவுக்கும் இந்த டுவிட்டர் பக்கத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரியவந்தது.

இதனை அடுத்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். நான் விசிக குறித்து கூறியதாக வந்த செய்தி போலி டுவிட்டர் பக்கத்தில் உள்ளது என்றும் எனது ஒரிஜினல் பக்கம் வேறு என்றும் நான் அரசியல் அதிகமாக பேச மாட்டேன் என்றும் அதுமட்டுமின்றி டுவிட்டரில் நான் மிக குறைவாகவே பதிவுகள் செய்வேன் என்றும் கூறியுள்ளார். எனவே இதுகுறித்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version