தமிழ்நாடு

பெண்ணிடம் வம்பு: அரியலூர் அனிதாவின் அண்ணன் வன்கொடுமை வழக்கில் கைது!

Published

on

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் பெண் ஒருவரிடம் வம்பு இழுத்து தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வசந்தி என்பவர் தெருவில் நின்றிருந்தபோது அனிதாவின் இரண்டாவது அண்ணன் அருண்குமார் வசந்தியை அச்சுறுத்தும் வகையில் பைக்கை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அருண்குமார் பலமுறை இவ்வாறு நடந்து கொண்டிருந்ததால் இது குறித்து வசந்தி தனது கணவர் செந்திலிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அருண்குமாரை தட்டி கேட்க, பதிலுக்கு அருண் குமார் செந்தில்-வசந்தி தம்பதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து செந்தில், வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.

 

seithichurul

Trending

Exit mobile version