/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் அனிருத்: என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடியுள்ள நிலையில் தற்போது எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இசையமைக்கும் எம்எம் கீரவாணி இசையில் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் தெலுங்கு உள்பட பல இந்திய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ .இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத்துடன் இணைந்து பணிபுரிந்ததில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அனிருத் சுறுசுறுப்பானவர் மட்டுமன்றி திறமையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் தமிழ் பதிப்பில் புரமோஷன் பாடல் ஒன்றை அனிருத் பாடி உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் அனிருத் பணிபுரிந்த தகவல் தற்போது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version