சினிமா செய்திகள்
அனிருத்-கீர்த்தி சுரேஷ் திருமணமா? இது என்னடா புதுக்கதையா இருக்கு?
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் சமூகவலைதளத்தில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தற்போது ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பதும் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை அனிருத் திருமணம் செய்ய இருப்பதாகவும் இது பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வத்ந்தி பரவிவருகிறது. இதுகுறித்து அனிருத் தரப்போ, அல்லது கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் – கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்தால் எங்களுக்கு சந்தோசம் தான் என்று இருதரப்பு ரசிகர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.