சினிமா செய்திகள்

நடிகர் ஜெய்-ன் இசையமைப்பாளர் அவதாரத்துக்கு அனிருத் வரவேற்பு..!

Published

on

நடிகர் ஜெய் முதன்முறையாக இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஜெய் இசை அமைத்த முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜெய் ‘ட்ரிபிள்ஸ்’ திரைப்படம் மூலம் ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகம் ஆகியுள்ளார். டிசம்பர் 11-ம் தேதி ட்ரிபிள்ஸ் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கி உள்ளார். ஜெய் மற்றும் வானி போஜன் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய் ஒரு இசை அமைப்பாளராக உருவாகி உள்ளார். இத்திரைப்படத்தில் முதல் சிங்கிள் ‘உயிர் உன்னோடு சேருமோ’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் அனிருத், “ஹே வராண்டா… இவன் இசையில் அசத்தும் ஹீரோதான் டா… ஜெய்-யை இசை உலகத்துக்கு வரவேற்கிறேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version