தமிழ்நாடு

அனிதா, பிரதீபா, சுபஸ்ரீயை தொடர்ந்து ஏஞ்சலினா சுருதி: தொடரும் நீட் தற்கொலைகள்!

Published

on

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஏஞ்சலினா சுருதி என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோலையூரை சேர்ந்த ஏஞ்சலினா சுருதி கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் தோலிவியடைந்தார். இதனால் விருப்பமின்றி பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

தான் விருப்பப்பட்ட மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போனதால் நேற்று ஏஞ்சலினா சுருதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தியும், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவி ஏஞ்சலினா சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவர்கள் மன தைரியத்துடன் தொடர்ந்து போராடி வெற்றி பெறவேண்டும் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த நீட் தற்கொலைகள் தொடர்ந்தவாறே இருப்பது கவலைக்குறியது.

seithichurul

Trending

Exit mobile version