சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடிகை ஆன்ட்ரியா..!- புதிய போஸ்டர் வெளியீடு

Published

on

நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய புகைப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்-க்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று 35-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆன்ட்ரியா-வை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக புது அப்டேட் ஒன்றை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அழகான பச்சை நிற புடவையில் புன்னகையுடன் இருக்கும் ஆன்ட்ரியா-வை தளபதி விஜய் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்றது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆன்ட்ரியா ரசிகர்கள் மட்டுமல்லாது இப்புதிய புகைப்படத்தால் விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version