சினிமா

காக்கி டிரஸ் போடும் ஆண்ட்ரியா!

Published

on

ஆண்ட்ரியா போலீசாக லீடு ரோலில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டது.

நயன்தாரா தொடங்கி, த்ரிஷா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா என அனைவரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கிவிட்டனர்.

இந்த லிஸ்டில் நம்ம ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். கன்னடத்தில் ’தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய சத்யா, தமிழில் ஆண்ட்ரியாவை லீடு ரோலில் வைத்து போலீஸ் கதையை இயக்கவுள்ளார். இதில், ஆண்ட்ரியா காக்கி சட்டை போட்டு ஆக்‌ஷனில் தெறிக்கவிடவுள்ளார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டது. சென்னை, கொச்சின், பரோடா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version