விளையாட்டு

IPL- புதுசா… மாஸா… கெட்டப் மாற்றிய ஆன்ட்ரே ரஸல்!

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது.

இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் மோதுகின்றன. இரண்டு அணியிலும் திறன் வாய்ந்த வீரர்கள் இருப்பதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரே ரஸல், அந்த அணியின் வெற்றி தோல்விக்கு முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் சீசனுக்கு புதுவித சிகை அலங்காரத்துடன் களம் இறங்கியுள்ளார். பொதுவாக தன் ஒரிஜினல் கலருடன், ஹேர் கட்டிங்கில் வித்தியாசம் காட்டும் ரஸல், இந்த முறை முற்றியும் முடியின் வண்ணத்தை மஞ்சள் நிறத்துக்கு மாற்றியுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version