இந்தியா

வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம்… கலக்கும் ஆந்திர முதல்வர்!

Published

on

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் புதுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஜெகன் மோகன் ரெட்டியின் பல அரசுத் திட்டங்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் வரவேற்பு கிடைத்துவிடுகிறது. ஆந்திர சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக இருந்த ஜெகன் மோகன் அறிவித்த நவரச திட்டங்களுள் இந்த வீட்டுக்கே நேரடி ரேஷன் திட்டமும் ஒன்று. கொடுத்த உறுதி மொழியின் அடிப்படிஅயில் ஜெகன் மோகன் தனது திட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக அம்மாநில மக்கள் தற்போது முதல்வரை புகழ்ந்து வருகின்றனர்.

மேலும், வீட்டுக்கே நேரடி ரேஷன் விநியோகிக்கும் திட்டத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக சுமார் 830 கோடி ரூபாய் செலவில் 9,260 லோடு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று செயல்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில் கொடியசைத்து துவக்கி உள்ளார் ஜெகன் மோகன். கூடுதலாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்க்க ஒரு ஊரில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் எனப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் சென்று சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version