இந்தியா

ஆந்திராவின் 13 மாவட்டக்களும் பிரிப்பு: திருப்பதி தலைநகராக கொண்டு புதிய மாவட்டம்!

Published

on

ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆந்திர அரசும் இது குறித்து ஆய்வு செய்து அனைத்து மாவட்டங்களையும் பிரிக்க ஆயத்த பணிகளை செய்து வந்தது.

இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட அனைத்து புதிய 13 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய இரண்டு மாவட்டங்கள் தோன்றி உள்ளன. இதில் திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

திருப்பதியை தலைநகராக கொண்ட பாலாஜி மாவட்ட ஆட்சியராக வெங்கட்ரமணா ரெட்டியும், கால்வதுறை கண்காணிப்பாளராக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு விளக்கமளித்துள்ளது.

Trending

Exit mobile version