இந்தியா

வங்கக்கடலில் புதிய புயல்: நாளை பள்ளிகள் விடுமுறை!

Published

on

வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகவும் இதன் காரணமாக புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகி இருப்பதாகவும் இந்த புயலுக்கு அசானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் அங்கு சூறைக்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தமான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அதனால் மீனவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் கடலோர படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version