சினிமா செய்திகள்

அந்தாதூன் தமிழ் ரிமேக்கின் மாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’!

Published

on

இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார்.

தபு நடித்த வில்லி கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஜோதிகா நடிப்பில், சூர்யா தயாரிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இயக்குநரான ஜே.ஜே.ஃபிரெட்ரிக்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரசாந்தின் தந்தையான தியாகராஜன், இப்படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் பெயர் ‘அந்தகன்’. அந்தாதூன் படத்தில், ஆயுஷ்மான் குரானா ஒரு பியானிஸ்டாக இருப்பார். அதன் காரணமாக அந்தப் படத்தில் வரும் இசை, மிகச் சிறப்பானதாக இருக்கும். அதன் இன்ஸ்பிரேஷனில் இப்படம் எடுக்கப்படுவதால் எப்படியும் இந்தப் படத்திலும் இசை முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை என்பதால் அதன் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version