தமிழ்நாடு
அந்தமான் உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக மோதல்: அண்ணாமலை பிரச்சாரம்
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அந்தமானில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கும் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தமான் யூனியன் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு உள்ள போர்ட் பிளேயர் நகராட்சி உள்பட பல நகராட்சிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை அழைப்பு விடுத்தது.
இதனை அடுத்து நேற்று அந்தமான் சென்ற அண்ணாமலைஇன்று முதல் அந்தமானில் சில நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.