சினிமா செய்திகள்

இன்னும் ஐந்து படங்களுக்கு அப்புறமே ஆன்மீக அரசியல்!

Published

on

2018 ஆண்டு பிறப்பதை முன்னிட்டு, அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த ரஜினி ரசிகர்கள் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றினார். ஆனால், 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளின் போது, ஒரு வருடம் ஆனதே ஆன்மீக அரசியல் எப்போது என்ற கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ எனக் கூறிவிட்டு அம்பானியின் மகள் திருமணத்திற்கு கிளம்பிவிட்டார்.

பின்னர் திரும்பி வந்த ரஜினி, கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயரை அமெரிக்காவில் கொண்டாட குடும்பத்துடன் கிளம்பிவிட்டு விழாவை சிறப்பித்துள்ளார்.

தற்போது, பேட்ட படத்திற்கு பிறகாவது அரசியலுக்கு வருவாரா என ஏங்கி காத்திருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு, பேட்ட படத்திற்கு பிறகு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், பின்னர் பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவுடன் ஒரு படம், கே.எஸ். ரவிக்குமாருடன் ஒரு படம் மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம் கடைசியாக ராஜமெளலி இயக்கத்தில் ஒரு சரித்திரப் படம் என லிஸ்ட்டை நீட்டியுள்ளார்.

இந்த 5 படங்களும் எடுக்கப்பட்டு ரிலீசாவதற்குள் இன்னும் 5 ஆண்டுகள் கழித்துத்தான் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு ரஜினி மேலே கையை காட்டாமல் பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

Trending

Exit mobile version