தமிழ்நாடு

‘முதல்வருக்கு’ ஆலோசனை கொடுக்க நான் ரெடி என சொன்ன அன்புமணி; வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

Published

on

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க தயார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கு உரிமை கோரியது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து பலதரப்பட்டவர்களும் மு.க.ஸ்டாலினுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அன்புமணி, ‘தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்!’ எனக் கூறினார்.

இதற்கு நெட்டிசன்களின் கிண்டல்ஸ்:

seithichurul

Trending

Exit mobile version