தமிழ்நாடு

அன்புமணி ராமதாஸ் பின்னடைவு: தர்மபுரியில் கடும் இழுபறி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்டு மக்களவை தேர்தலை சந்தித்தனர். இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த ஏழு தொகுதிகளிலும் தற்போது பாமக பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்டார் அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தற்போதையை தர்மபுரி தொகுதியின் எம்பியாக உள்ள அன்புமணி ராமதாஸ் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார். தர்மபுரியை பொறுத்தவரையில் அன்புமணி மாறி மாறி முன்னிலையும், பின்னடைவையும் சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அன்புமணி 84802 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் 85070 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இதில் செந்தில்நாதன் 268 வாக்குகள் முன்னிலைபெற்றுள்ளார். இதனால் பாமக வேட்பாளர் அன்புமணிக்கும் திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்நாதனுக்கும் இடையே கடுமையான இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த நிலைமை மாறி மாறி வரலாம்.

seithichurul

Trending

Exit mobile version