தமிழ்நாடு

நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி இராமதாஸ்

Published

on

கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பதும் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர்கள் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தபோது ஒன்றிய அரசு என்பது நல்ல வார்த்தை தான் என்றும் அதனால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைத் தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்று உறுதிபட கூறியிருந்தார்.

ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மதிமுகவும் அதில் இணைந்து கொண்டது. நாங்கள் மத்திய அரசு என்று தான் அழைப்போம் என்றும், பெயரை மாற்றி அழைப்பதால் எந்தவித பயனும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள திமுக தலைவர்கள் மத்திய அரசு என்று தான் அழைத்து வந்தார்கள் என்பதும் வாஜ்பாய் தலைமையிலான அரசியலும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசிலும் திமுக இடம் பெற்றிருந்த போது கூட மத்திய அரசு என்றும் மத்திய அமைச்சர்கள் என்று தான் அழைத்து வந்தார்கள் என்பதும் தற்போது திடீரென அண்ணாவின் கூற்று ஞாபகம் வந்து ஒன்றிய அரசு என்று அழைத்து வருவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்களும் தற்போது ஒன்றிய அரசு என்றே செய்தி வெளியிட்டு வருகின்றன என்றும், இதில் இருந்து திமுகவுக்கு ஆதரவு தரும் பத்திரிகைகள் எவை எவை என்பதை கண்டு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version