தமிழ்நாடு

இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால்… அன்புமணி எச்சரிக்கை

Published

on

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் தம்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடும் வகையில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் அந்த மசோதா செல்லாது என்று மதுரை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது.

இந்த நிலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இது சமூக நீதி பிரச்சனை என்பதால் தமிழக அரசு இதை முக்கிய கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி பேசினார்.

அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் எங்கள் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என்று அவர் எச்சரிக்கையுடன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version