தமிழ்நாடு

கொரோனா 2வது அலையை தமிழ்நாடு அரசு சரியாக கையாண்டது: அன்புமணி புகழாரம்

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சரியான விதத்தில் கையாண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பாமக, திமுக மீது மென்மையான போக்கையே கையாண்டு வருகிறது. குறிப்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள், பாமகவை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் அதிமுக – பாமக கூட்டணி விரைவில் முறியும் என்று சொல்லப்படுகிறது. எதிர் வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிடாது என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், திமுக கூட்டணிக்கு தூண்டில் போடுவது போல பேசியுள்ளார் அன்புமணி. அவர், ‘கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு மிகச் சரியாக கையாண்டது. மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கு ஏற்றாற் போல நடந்தது பாராட்டுக்குரியது’ என்று தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து கேள்வி எழுந்த போது, அது குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்துவ விட்டார் அன்புமணி.

 

seithichurul

Trending

Exit mobile version