தமிழ்நாடு

இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? லியோனி பதவி குறித்து அன்புமணி!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமித்தார். இதனை அடுத்து லியோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் ஒரு சிலர் கண்டனமும் தெரிவித்து வந்தனர்.

நடிகை கஸ்தூரி நேற்று தனது டுவிட்டரில் இனிமேல் பாடங்களில் நாம் திமுகவின் வரலாற்றையும் திகவின் சமூக அறிவையும் படிக்கலாம் என்று கேலியாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது.

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version