தமிழ்நாடு

மழையால் சேதமடைந்த பள்ளிகள் உடனே இடிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

மழையால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அந்த கட்டிடம் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காரணமாக பல கட்டடங்கள் மழை நீரில் ஊறி ஆபத்தான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ குறிப்பாக அரசு பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழங் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அந்த ஒரு சில கட்டிடங்கள் மழைநீரில் மூழ்கி இடியும் நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சேதமடைந்த மழையால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட கட்டடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டுள்ளது என்றும் அந்த குழு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையாலும் பள்ளிகள் பல நாள்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version