தமிழ்நாடு

12ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து எனவும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் எனவும் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கணக்கிடும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கென அமைக்கப்பட்ட குழுவினர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களிலிருந்து 50%, பதினோராம் வகுப்பு தேர்வில் இருந்து எடுத்த மதிப்பெண்களில் இருந்து 20 சதவீதம் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட மதிப்பெண்களில் இருந்து 30% என கணக்கிட்டு வருவதாகும் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்த செய்தியின்படி இன்னும் ஓரிரு நாளில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளி திறப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடங்க இருப்பதை அடுத்து அதற்கு முன்னரே 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் இன்னும் ஓரிரு நாளில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் குறித்தும் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version