தமிழ்நாடு

இந்த முறை பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் என்னென்ன மாற்றங்கள்?- அமைச்சர் பேட்டி

Published

on

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டில் எந்த மாதிரியான பாடத் திட்டங்கள் வகுக்கப்படும் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் புதுமையாகத் தான் இருக்கிறது. மாணவர்கள், பள்ளிக்கு வந்து தான் கல்வி கற்க வேண்டும் என்கிற சூழலை மாற்றுவது சவாலாகத் தான் இருக்கிறது. இருப்பினும் அதை தொடர்ந்து சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெறுமனே ஆன்லைன் மூலமாக மட்டும் மாணவர்களை சென்றடையாமல் மாற்று வழி குறித்தும் சிந்தித்து வருகிறோம்.

சென்ற ஆண்டும் கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியாது என்கிற காரணத்தினால் 60 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன. இந்த முறையும் மாணவர்கள் எந்த அளவுக்குப் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற முடியும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்’ என்று தெரிவித்து உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version