இந்தியா

டுவிட்டர் சி.இ.ஓ ஒரு வைரஸ்: அதற்கு தடுப்பூசியே கிடையாது: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா

Published

on

டுவிட்டர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றுள்ள இந்தியாவின் பராக் அக்ரவால் அவர்கள் ஒரு வைரஸ் என்றும் அதற்கு தடுப்பூசியை கிடையாது என்றும் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை பயன்படுத்தப்படும் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அக்ரவால் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இந்தியர்களான சுந்தர் பிச்சை, சத்யன் நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, சாந்தணு நாராயண் ஆகியோர் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களின் சிஇஓவாக பதவியேற்று வரும் நிலையில் தற்போது பராக் அக்ரவால்அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டுவிட்டர் தளத்தின் புதிய சிஇஓவாக பதவி ஏற்றிருக்கும் பராக் அக்ரவால் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் கூறியபோது ’இவர் ஒரு தொற்றுநோய். இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது இந்திய வைரஸ். இதற்கு எந்த தடுப்பூசியும் கிடையாது என்று பெருமைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version