தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் அம்மாவுக்கு வீடு கட்டி கொடுத்த தொழிலதிபர்!

Published

on

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி சட்னி சாம்பார் விற்பனை செய்து வருகிறார். இதனைக் கேள்விப்பட்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இட்லி அம்மாவுக்கு தன்னால் செய்த உதவியை செய்ய போகிறேன் என டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.

கமலாம்மாள் விறகு அடுப்பை பயன்படுத்துவதை கேள்விப்பட்ட அவர் உடனடியாக கேஸ் இணைப்பு ஒன்றும் கேஸ் அடுப்பு ஒன்றும் தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். மேலும் அவரும் அவருடைய வீடு சரியாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஆனந்த் மஹிந்திரா அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முடிவு செய்தார்.

கமலாம்மாள் சொந்த ஊரில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டும் பணியும் நடந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தில் அந்த வீட்டை கமலாம்மாளிடம் ஒப்படைத்து உள்ளார். இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, ‘எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர் சந்தோசம் கொடுக்கும் முயற்சியை விட வேறு பெரிய சந்தோஷம் எதுவுமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version