தமிழ்நாடு

விஜய் அபாரதத்திற்கு தடை: இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு!

Published

on

நடிகர் விஜய்க்கு விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராததிற்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதனை அடுத்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்க வேண்டும் என்றும் தன்னை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்தையும் நீக்க வேண்டும் என்றும் கூறி விஜய் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு சற்று முன் விசாரணைக்கு வந்த நிலையில் விஜய்யின் வழக்கறிஞர் ஆவேசமான சில கருத்துக்களை எடுத்து வைத்தார்

விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தேவை இல்லாதது என்றும் வரி விலக்கு கேட்டு ஏராளமானோர் வழக்கு தொடர்ந்த நிலையில் விஜய் மீது மட்டும் சர்ச்சைக்குரிய கருத்தை அவர் பேசி இருக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒரே வாரத்தில் வரி செலுத்தவும் விஜய் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி கருத்துக்கள் தெரிவித்தும், ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version