தமிழ்நாடு

‘மோடி முதல் ஸ்டாலின் வரை காலி’- வேற லெவல் வைரலாகும் அமமுக-வின் ‘எஞ்சாயி எஞ்சாமி’ ரீமிக்ஸ்

Published

on

‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக் குழு மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் அறிவு. அதேபோல ‘ஏய் சண்டக்கார’, ‘காட்டுப் பயலே’, ‘ரவுடி பேபி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி தமிழின் முன்னணிப் பாடகியாக உருவெடுத்துள்ளார் தீ. இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்னும் பாடலை வெளியிட்டனர்.

தமிழின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை தயாரித்தார். வித்தியாசமான மற்றும் புதுமையான இசையாலும், அசர வைக்கும் காட்சிகளாலும் இந்தப் பாடல் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. இதுவரை இந்தப் பாட்டை யூ-டியூபில் மட்டும் பல கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் இந்தப் பாடல் பல யூ-டியூப் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை லேட்டஸ்ட் அரசியல் நிலவரத்துக்கு ஏற்றது போல ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. அரசியல் பகடி வரிகளுக்காகவும், கச்சிதமான பொருளுக்காகவும் இந்த ரீமிக்ஸ் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பாடல் இதோ:

seithichurul

Trending

Exit mobile version