தமிழ்நாடு
தினகரனின் அமமுக 10 மக்களவை தொகுதிகளை கைப்பற்றுமாம்: பிரபல ஜோதிடர் கணிப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வந்தபடியே உள்ளன.
குறிப்பாக முதன்முதலாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக வெற்றி பெறாவிட்டாலும் பெரும்பாண்மையான வாக்குகளை பிரித்து வெற்றியை தீர்மாணிக்கும் சக்தியா விளங்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சில தொகுதிகளில் அமமுக வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக்கணிப்புகள் கூட அமமுக 2 முதல் 3 தொகுதிகளை கைப்பற்றும் என கூறியது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் சில ஜோதிடர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் அமமுக 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணித்து பலரையும் மலைக்க வைத்துள்ளார்.
மதுரையை சேர்ந்த கருட சித்தர் கணித்து கூறியதாவது. திமுக கூட்டணி 20 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெறும். அமமுக 10 தொகுதிகளிலும் அதிமுக அதைவிட குறைவாக வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெறும் என அவர் கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி 4 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் கூறியுள்ளார். ஆனால் மத்தியில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என அவர் கூறியுள்ளார்.