தமிழ்நாடு

தொடர் பின்னடைவில் அமமுக: தேனியில் மூன்றாவது இடம்!

Published

on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலில் தனித்து களம் கண்ட டிடிவி தினகரனின் அமமுக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த கட்சி குறைந்தது 2 அல்லது 3 இடங்களையாவது கைப்பற்றும் என கணிக்கப்பட்டது ஆனால் அமமுக இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலையில் இருப்பதாக தகவலில்லை. அனைத்து தொகுதியிலும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது அமமுக.

குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் தொகுதியான தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்தும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றனர். தங்க தமிழ் செல்வன் மூன்றாம் இடைத்திலேயே நீடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version