தமிழ்நாடு

வேலூர் தேர்தலில் தினகரனின் அமமுக யாருக்கு ஆதரவு தெரியுமா?அதிரடி அறிவிப்பு!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடாத நிலையில் அந்த தேர்தலில் யாருக்கு தங்கள் கட்சியின் ஆதரவு என்பதை அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடைபெறும் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிடவில்லை. அமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்தபின்னர் வரும் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக தினகரன் தெரிவித்தார். இந்நிலையில் வேலூரில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கமலின் மக்கள் நீதி மய்யம்மும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் பேசிய தினகரன், அமமுக கட்சியாக பதிவு செய்த பின்பே இனி வரும் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடக்கும் வேலூர் தொகுதி தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version